எழுத்துப்பிழைகளையும் ஒற்றுப்பிழைகளையும் கண்டறிந்து, அவற்றுக்கான இலக்கணக் காரணத்தோடு GoTamil திருத்தங்களைப் பரிந்துரைக்கும். கீழே உள்ள எழுத்துப் பெட்டியில் உங்கள் தமிழை எழுதிப் பாருங்கள்.
இப்போதே எழுதிப் பாருங்கள்Grammar and style suggestions will show up here as you write.
இலக்கணத் திருத்தம்
தமிழில் எழுதும்போது பலருக்கும் சவாலாக இருப்பது ஒற்றுப்பிழைதான். GoTamil வாக்கியத்தின் அமைப்பைப் புரிந்துகொண்டு, தேவையான இடங்களில் மட்டும் திருத்தங்களைப் பரிந்துரைக்கிறது.
க், ச், த், ப் எங்கே வரும், எங்கே வராது என்பதை வாக்கியத்தின் பொருள் அறிந்து சுட்டிக்காட்டும்.
திணை, பால், எண், இடம் அறிந்து வினைச்சொற்களையும் வேற்றுமை உருபுகளையும் சரியாகப் பொருத்தும்.
நீங்கள் சொல்ல வந்த கருத்தையும் எழுத்து நடையையும் மாற்றாமல், பிழையை மட்டுமே திருத்தும்.
தோட்டத்தில் பல வண்ணப் பூக்கள் இருந்தது.
தோட்டத்தில் பல வண்ணப் பூக்கள் இருந்தது. இருந்தன.
எழுத்துப்பிழைத் திருத்தம்
'கரை' என்பதும் சரியான சொல்தான், 'கறை' என்பதும் சரியான சொல்தான். ஆனால் நீங்கள் எழுதும் வாக்கியத்திற்கு எது பொருந்தும் என்பதை GoTamil புரிந்துகொண்டு திருத்தும்.
நான் உங்களிடம் முன்னூறு ரூபாய் கொடுத்திருந்தேன்.
நான் உங்களிடம் முன்னூறு முந்நூறு ரூபாய் கொடுத்திருந்தேன்.
வெறும் அகராதிச் சரிபார்ப்பாக இல்லாமல், முன் பின் சொற்களின் பொருளை வைத்துப் பிழையைக் கண்டுபிடிக்கும்.
அவசரத்தில் விடுபடும் எழுத்துகள், மாறி விழும் குறில் நெடில் பிழைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டும்.
நாங்கள் நடத்திய உட்சோதனைகளில், அன்றாடத் தமிழ் வாக்கியங்களின் எழுத்துப்பிழைகளைத் திருத்துவதில் 94% துல்லியத்தைப் பெற்றுள்ளது.
காரணத்தோடு திருத்தம்
சிவப்புக் கோடு போட்டுத் திருத்துவதோடு GoTamil நின்றுவிடுவதில்லை. ஒரு சொல் ஏன் மாறுகிறது, அங்கே என்ன இலக்கண விதி செயல்படுகிறது என்பதையும் எளிய தமிழில் எடுத்துச்சொல்லும்.
எந்த விதியின் அடிப்படையில் அந்தத் திருத்தம் பரிந்துரைக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டும்.
தனியாக இலக்கண நூல் படிக்காமலேயே, அன்றாடம் எழுதும்போதே தமிழ் இலக்கண நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
காரணத்தைப் படித்துப் பார்த்து, அந்தத் திருத்தத்தை ஏற்பதா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
Original:
நாங்கள் அரங்கம் சென்றடைந்தபோது, விழா தொடங்கியது.
Suggestion:
நாங்கள் அரங்கம் சென்றடைந்தபோது, விழா தொடங்கியிருந்தது.
Reason:
இங்கே, 'தொடங்கியது' என்ற வினைச்சொல், அவர்கள் வந்தடைந்த அதே கணத்தில் விழா தொடங்கியதாகப் பொருள் தருகிறது. நிகழ்வு முன்னரே தொடங்கிவிட்டது என்பதைத் தெளிவாகக் காட்ட, 'தொடங்கியிருந்தது' என்ற இறந்தகால வினைமுற்றைப் பயன்படுத்துவதே சரியானது.
எளிய தமிழ்த் தட்டச்சு
மனதில் வரும் கருத்துகளைத் தடையின்றி எழுத, உங்களுக்குப் பழக்கப்பட்ட ஆங்கில விசைப்பலகையே போதும். GoTamil அதைத் துல்லியமான தமிழாக மாற்றிக்கொடுக்கும்.
நீங்கள் தட்டச்சு செய்யும்போதே வாக்கியத்திற்குப் பொருந்தும் பல தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்கும்.
புதிய மென்பொருளோ விசைப்பலகையோ நிறுவாமல், உங்கள் உலாவியிலேயே நேரடியாகத் தட்டச்சு செய்யலாம்.
கணினி, மடிக்கணினி, கைப்பேசி என எதில் எழுதினாலும் உங்கள் வரைவுகள் (Drafts) தானாக ஒத்திசைக்கப்படும்.
உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியில் yelidhu
குரல் வழித் தட்டச்சு
நீண்ட கட்டுரைகளையோ கடிதங்களையோ தட்டச்சு செய்யச் சோர்வாக இருக்கிறதா? குரல் பொத்தானை அழுத்திவிட்டுத் தமிழில் பேசுங்கள், உங்கள் குரல் உடனுக்குடன் எழுத்துகளாக மாறும்.
இன்று காலை மிகவும் அழகாக இருந்தது. நான் என் நண்பர்களுடன் பூங்காவிற்குச் சென்றேன்.
நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திரையில் தமிழ்ச் சொற்கள் தடையின்றிப் பதிவாகும்.
மேடைப் பேச்சுப் போன்ற தூய தமிழானாலும், அன்றாடப் பேச்சுத் தமிழானாலும் புரிந்துகொண்டு எழுதும்.
பேசி முடித்ததும், GoTamil இலக்கணத் திருத்தியைக் கொண்டு ஒரு முறை சரிபார்த்துக் கட்டுரையை முழுமையாக்கலாம்.
தமிழ்க் கையெழுத்து அறிதல் (Tamil OCR)
கையால் எழுதிய கட்டுரைகள், ஆய்வுக் குறிப்புகள், பழைய கடிதங்கள்... இவற்றை மீண்டும் உட்கார்ந்து தட்டச்சு செய்ய வேண்டியதில்லை.
கையால் எழுதிய தமிழ்ப் பக்கத்தைப் புகைப்படம் எடுத்துப் பதிவேற்றினால், உடனே டிஜிட்டல் எழுத்தாக மாற்றித் தரும். பிறகு நீங்கள் விரும்பியபடி திருத்திக்கொள்ளலாம்.
டிஜிட்டல் எழுத்தாக மாறியதும், அதில் உள்ள எழுத்துப்பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் உடனடியாகத் திருத்திக்கொள்ளலாம்.
திருத்திய உரையை TXT, DOCX அல்லது PDF கோப்பாக (Pro) மாற்றிச் சேமித்துக்கொள்ளலாம்.
நேற்று மாலை நான் என்
நண்பர்களுடன் கடற்கரைக்குச்
சென்றேன்.
நேற்று மாலை நான் என் நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்றேன்.
கணக்குத் தொடங்காமலேயே இப்போதே 200 சொற்கள் வரை இலவசமாக எழுதித் திருத்திப் பாருங்கள்.
இப்போதே சரிபார்க்கவும்GoTamil பயன்பாடு குறித்து உங்களுக்கு எழக்கூடிய முக்கியமான கேள்விகளும் அவற்றிற்கான விடைகளும்.